Friday, May 25, 2007

102. க்ளிக்.


அம்மணி நம்ம நாராயணன் கூடதான் படிக்கிறாங்களாம்.. மேலும் தகவல்களுக்கு தொடர்புகொள்க.,
ஒளி. நாராயாணன்,
விவேகானந்தர் குறுக்குச் சந்து,
முனிச் பஸ்-ஸ்டாண்டு அருகில்,
முனிச்,
செருமனி

Wednesday, May 23, 2007

101. தத்துவ தொகுப்பு

1

அண்ணே...
கருப்பு ஒரு கலரு

வெள்ளை ஒரு கலரு

ஆனா கருப்பு வெள்ளை டீ.வி. கலர் டீ.வி. கிடையாது.

- இன்னமும் கருப்பு வெள்ளை டீ.வி. பார்ப்போர் சங்கம்

2

பையி 'கட்'டானா தைக்கலாம்;

துணி 'கட்'டானாலும் தைக்கலாம்;

தோலு 'கட்'டானாகூட தைக்கலாம்;

ஆனா,


கரன்ட் 'கட்'டானா தைக்க முடியுமா?

- இருட்டுல உட்கார்ந்து யோசிப்போர் சங்கம்

3

பவர் கிளாஸை,

என்னதான் ஃப்ரிட்ஜ்ல வச்சு எடுத்தாலும்

அது கூலிங் கிளாஸ் ஆகாது

- கூலிங் கிளாஸ் போட்டு யோசிப்போர் சங்கம்

4

கூலிங் கிளாஸ் போட்டு

பவர் ரேஞ்சர்ஸ் பார்த்தாலும்

அது பவர் கிளாஸ் ஆகாது.

- பவர் கிளாஸ் போட்டு யோசிப்போர் சங்கம்

5

சன்டே ஆனா ஜாலியா சண்டை போடலாம்,

அதுக்காக,

மன்டே ஆனா ஜாலியா மண்டையப் போட முடியாது

6

போலீஸ் ஸ்டேசனுக்கு ஃபோன் போட்டால் போலீஸ் வரும்,

ஆனா,

ரயில்வே ஸ்டேசனுக்கு ஃபோன் போட்டா ரயில் வருமா?

7

குளவி கொட்டினா வலிக்கும்.

தேள் கொட்டினா கூட வலிக்கும்.

ஆனா

முடி கொட்டினா வலிக்குமா?

8

பாக்கு மரத்துல பாக்கு இருக்கும்.,

தேக்கு மரத்துல தேக்கு இருக்கும்,

ஆனா

பன மரத்துல பணம் இருக்காது.........

- தத்துவ ரீதியாக மட்டுமே யோசிப்போர் சங்கம்

9

இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம்.

ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

10

பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்

11

சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம்

ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது

12

டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர்.

ஆனால்

உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்

13

என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும்,

அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

14

அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும்.

ஆனா

பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை

15

நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும்,

அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது

16

க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும்,

ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?

17

ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும்.

ஆனால்

1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.

18

குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம்.

ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.

19

செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது.

ஆனால்

மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.

20

ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம்.

ஆனால்

போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.

21

என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும்,

சொறி நாய் தொரத்தினா ஓடித்தான் ஆகணும்.

22

சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும்.

ஆனா,

முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது.

அதுனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!

- எப்படி எப்படியோ யோசிப்போர் சங்கம்

23

Tea மாஸ்டர் என்னதான் லைட்டா Tea போட்டாலும்

அதுலயிருந்து வெளிச்சம் வராது.

- இது ஒரு சங்கம் சேராத தத்துவம்!!!

24

காசு இருந்தால், கால் டாக்ஸி!!!...

காசு இல்லைனா, கால் தான் டாக்ஸி!!!

25

கோவில் மணியை நாம அடிச்சா சத்தம் வரும்...

ஆனா,

கோவில் மணியால நம்மல அடிச்சா ரத்தம் தான் வரும்.

26

நீ என்னதான் வீரனா இருந்தாலும்.,

குளிர் அடிச்சா திரும்ப அடிக்க முடியாது..

27

என்ன தான் அஹிம்ஸாவாதியா இருந்தாலும்.,

சப்பாத்தியை சுட்டு தான் சாப்பிட முடியும்............!

28

ஆயிரம் தான் இருந்தாலும்.,

ஆயிரத்தி-ஒன்னு தான் பெரிசு..

29

நீ எவ்வளவு பெரிய படிப்பாளியா இருந்தாலும்..,

EXAM HALL போய் படிக்க முடியாது

30

SCHOOL TESTbit அடிக்கலாம்.........

COLLEGE TESTBIT அடிக்கலாம் .......

ஆனா.......

BLOOD TESTbit அடிக்கமுடியுமா..?

31

என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும்..,

அதால "THANK YOU" சொல்ல முடியாது!!!!!!!! இதுதான் வாழ்க்கை

32

வாயால "நாய்"னு சொல்ல முடியும்

ஆன

நாயால "வாய்"னு சொல்ல முடியாது

33

ரயில் எவ்வளவு வெகமா போனாலும், கடைசி பெட்டி கடைசியதான் போகும்

34

அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம்,

பல் கொட்டினா வேற பல் வங்கலாம்,

ஆனா

தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியது

35

செல்லுல பாலன்ஸ் இல்லனா கால் பண்ண முடியாது,

மனுஷனுக்கு கால் இல்லனா, பாலன்ஸ் பண்ண முடியாது

36

பஸ் போயிட்டா பஸ் ஸ்டான்ட் அங்கயேதான் இருக்கும்

ஆனா

சைக்கிள் போயிட்டா சைக்கிள் ஸ்டான்ட் கூடவே போகும்

37

ஃபைல்ஸ்னா ஒக்காந்து பாக்கனும்,

பைல்ஸ்னா பாத்து ஒக்காறனும்

38

ஆம்பிளைக்கு அடிபட்டா ஏத்திகிட்டு போக ஆம்புலன்ஸ் இருக்கு.

ஆன

பொம்பளைக்கு அடிபட்டா ஏதிக்கிட்டு போக பொம்புலன்ஸ் இருக்கா ?

39

தண்ணில மீன் இருக்குறதால, தண்ணி நான் வெஜ் ஆகாது

40

கால கடிக்கிற செருப்பால முள்ள கடிக்க முடியாது

41

எவ்வளவு நீச்சல் தெரிஞ்சாலும் டம்ப்ளர் தண்ணீல நீந்த முடியாது

42

வாயால மூச்சு வாங்கலாம்,

ஆனா

மூக்கால தண்ணி குடிக்க முடியாது

43

ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க.

அப்ப,

பஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?

44

அண்ணே...

விக்கெட் விழுந்தா, விக்கெட் கீப்பர் சிரிப்பார்.

ஆனா,

கோல் விழுந்தா, கோல் கீப்பர் சிரிப்பாரா?

- ரூம் போட்டு, மல்லாக்கப் படுத்து, பயங்கரமாக யோசிப்போர் சங்கம்.

45

அண்ணே...

நாம 21ஐ "டுவென்டி ஒன்"னு சொல்றோம்.

31ஐ "தேர்ட்டி ஒன்"னு சொல்றோம்.

41ஐ "ஃபார்டி ஒன்"னு சொல்றோம்.

அப்ப ஏன்,

11ஐ மட்டும் "ஒன்ட்டி ஒன்"னு சொல்லக் கூடாது?

- பயங்கரமாக யோசிப்போர் சங்கம்.

46

அண்ணே...

எனக்கு ஒரு சந்தேகம்...

நடனக் கலைன்னா டான்ஸ் ஆடறது.

ஓவியக் கலைன்னா படம் வரையறது.

அப்ப தவக்களைன்னா?


- நடு ரோட்டில் புரளாமல் படுத்துக் கொண்டு யோசிப்போர் சங்கம்

47

அண்ணே...


Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்!

ஆனா,

பிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே!!

கொஞ்சம் யோசிங்க!!!


- பிரியாணி வாங்க காசு இல்லாத வாலிபர்கள் சங்கம்

48

ஒரு கம்பெனியோட சேர்மேன் சேர் மேல உக்கார முடியும்,

ஆனா,

அந்த கம்பெனியோட வாட்ச்மேன் வாட்ச் மேல உட்கார முடியாது.

49

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது
.

-
தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

50

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்
.
ஆனா
,
கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்

51

நான் நினைச்சா VIP ஜட்டி போடலாம்.

ஆனா

எந்த VIP நினைச்சாலும் என் ஜட்டிய போடமுடியாது.

-ஜட்டி போடும்போது யோசிப்போர் சங்கம்.

52

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,
ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.

53

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.
ஆனா
,
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா
?
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!

54

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,
ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது
!!

அதேமாதிரி
,

என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்
,
லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!

55

டிசம்பர் 31க்கும், ஜனவரி 1க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம்.
ஆனால்
,
ஜனவரி 1க்கும்,டிசம்பர் 31க்கும்,ஒரு வருசம் வித்தியாசம்
.

இதுதான் உலகம்.

56

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்
.
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்
.
ஆனா
...
கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா
??

யோசிக்கனும்...!!

57

இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.

ஆனா

பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

58

ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,

மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.

59

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,

ஆனா

இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!

60

வாழை மரம் தார் போடும்,

ஆனா

அதை வச்சு ரோடு போட முடியாது!

61

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,

ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?

இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?

62

சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,

அதுக்காக,

மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?

63

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,
கழித்தல் கணக்கு போடும்போது
,
கடன் வாங்கித்தான் ஆகனும்.

64

கொலுசு போட்டா சத்தம் வரும்.
ஆனா
,
சத்தம் போட்ட கொலுசு வருமா?

65

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும், ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
இதுதான் உலகம்

66

T Nagar போனா டீ வாங்கலாம்.
ஆனால்

விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

67

என்னதான் பெரிய
வீரனா இருந்தாலும்,
வெயில் அடிச்சா
,
திருப்பி அடிக்க முடியாது.

68

இளநீர்லயும் தண்ணி இருக்கு,
பூமிலயும் தண்ணி இருக்கு
.
அதுக்காக
,
இளநீர்ல போர் போடவும் முடியாது
,
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.

69

உங்கள் உடம்பில்
கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,
ஒரு செல்லில் கூட

ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

70

ஓடுற எலி வாலை புடிச்சா நீ 'கிங்'கு
ஆனா...
தூங்குற புலி வாலை மிதிச்சா உனக்கு சங்கு.

71

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா
ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.

72

வண்டி இல்லாமல் டயர் ஓடும்.
ஆனால்
...
டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

73

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.
சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

74

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும் மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,
Rewind
லாம் பண்ண முடியாது.

75

"Tea"க்கும் "Cofee"க்கும் என்ன வித்தியாசம்?
"Tea"
ல ஒரு "e" இருக்கும். "Coffee" 2 "e" இருக்கும்